Monday 22 August 2011

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி


இந்தியாவில் முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண்மணியும், தமிழக சட்ட மேலவையில் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் பெற்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. நாட்டிலேயே முதல் பெண்கள் இயக்கமான இந்திய மாதர் சங்கத்தை துவக்கி கடைசிவரை அதன் தலைவியாக இருந்தார்.

இவர் 1886ம் ஆண்டு ஆக., 30ம் தேதி, புதுக்கோட்டையில் பிறந்தார். குழந்தை பருவத்திலிருந்தே இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். பெண்கள் கல்வி கற்க தயங்கி அந்தக்காலத்திலேய கல்லூரிக்கு சென்று படித்தார். 1907ம் ஆண்டில் சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். 1912ல் மருத்துவப்பட்டம் பெற்றார்.

அனைவரது பெற்றோர் போல, முத்துலட்சுமியின் பெற்றோரும் இவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் இதற்கு இவர் சம்மதிக்கவில்லை. மாறாக திருமணம் என்பது ஒரு பெண்ணின் சுதந்திரத்தை பறித்து விடும் எனவும், வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதனுக்கு அடங்கி வாழ்வது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி திருமணத்தை மறுத்து விட்டார். பின் 1914ல் இவருக்கு சுந்தர் ரெட்டி என்பவருடன் திருமணம் நடந்தது.

தமிழக மேலவைக்கு உறுப்பினராக 1926ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவதாசி ஒழிப்புத் திட்டம், பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் போன்றவை இவரின் சிறந்த பணிகள். தொடர்ந்து அவர் பெண்கள் விழிப்புணர்ச்சிக்கும், பெண்கள் காப்பகங்களுக்கும் சேவை செய்ய ஆரம்பித்தார். 

கேன்சர் நோயால் மக்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்தார். இவர் மேற்கொண்ட பல்வேறு போரட்டங்களுக்கு பின் அமைக்கப்பட்டது தான் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை. இவர் 1968ல் மறைந்தார்.

No comments:

Post a Comment